வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்து டாலரின் மதிப்பு சரிந்தது.
ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரின் மதிப்பு சரியாமல் இருக்கும் நடவடிக்கையை எடுத்தது. ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை வாங்கின. இதனால் டாலரின் விலை அதிகரித்தது.
இன்று 1 டாலர் ரூ. 39,34 முதல் ரூ. 39.24 வரை வர்த்தகம் நடந்தது.
ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ. 39.32 என்று விலையை அறிவித்தது. நேற்றும் இதே விலையை அறிவித்தது.