வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சரிந்தது.
இன்று காலை 1 டாலர் ரூ.39.24/26 என்ற அளவில் விற்பனையானது. இது கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அதிகபட்சமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பாகும்.
டாலரின் மதிப்பு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி தலையிட்டது. ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை வாங்கின. அதற்கு பிறகு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.30/31 என்ற அளவில் விற்பனையானது.
நேற்றும் டாலரின் மதிப்பு குறைவதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.