ஈரோட்டில் தக்காளி விலை உயர்வு

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (11:51 IST)
ஈரோடு பகு‌தியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக தக்காளி‌யி‌ன் விலை அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட‌த்‌தி‌லஉள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் சிறிய அளவில் தக்காளி மற்றும் கத்தரிகாய், கீரை வகைகளப‌யி‌ரி‌ட்டு‌ள்ள‌ன‌ர். உற்பத்தியாகும் காய்கறிகளை அந்தந்த பகுதியில் உள்ள தினசரி ச‌ந்தை‌யி‌ல் கொண்டுவந்தும் உழவர் சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.

webdunia photoWD
இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை தக்காளி கிலோ ஒன்று ரூ.எட்டு முதல் பத்து வரை விற்பனையானது. ஆனால் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததன் காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்தது. இதனால் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது.

நேற்று ஈரோடு ச‌ந்தை‌யில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 க்கு விற்பனையானது. இதனால் பெண்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதை குறைத்துள்ளனர்.