டாலர் மதிப்பு குறைந்தது

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (13:05 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலர் ரூ. 39.32 / 34 என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 7 பைசா அதிகம். ( நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ 39.39 / 41.)

வெப்துனியாவைப் படிக்கவும்