ரூபாயின் மதிப்பு உயர்வு!

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (13:07 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.
காலை 10 மணி நிரவரப்படி 1 டாலர் ரூ 39.3950/4050 என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. வெள்ளிக் கிழமை மாலை 1 டாலரின் விலை 39.4450/4550

இன்று டாலர் மதிப்பு குறைந்ததற்கு காரணம், அமெரிக்க ரிசர்வ் வங்கி அக்டோபர் 31 ந் தேதி வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைக்கும் என்ற எதிர் பார்க்கப்படுவதால், மும்பை பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துமாகும். பெட்ரோலிய நிறுவனங்கள், மாத இறுதியின் தேவைக்கு டாலர்களை வாங்கினாலும் டாலர் வரத்து அதிகளவு இருந்த காரணத்தினால் டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்