பங்குச் சந்தை 257 புள்ளிகள் உயர்வு!

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (19:39 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 257 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணும் (நிப்டியும்) 72.80 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குகளின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தன. மதியம் ஒரு நிலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 18,900.10 புள்ளிகளை தொட்டது. இறுதியில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட 257.98 புள்ளிகள் அதிகரித்து 18,770.89 புள்ளிகளில் முடிந்தது (நேற்றைய இறுதி நிலவரம் 18512.91) .

அதே போல் தேசிய பங்குச் சந்தையில் (நிப்டி) மதியம் 5,609.95 புள்ளிகளை தொட்டது. இறுதியில் நேற்றைய நிலவரத்தை விட 72.80 புள்ளிகள் அதிகரித்து 5,568.95 புள்ளிகளில் முடிந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5,496.15).

இந்திய பங்குச் சந்தை போலவே ஐரோப்பா, ஆசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ரொக்கம் அடிப்படையிலான பங்கு வர்த்தகம் சுமார் ரூ.8 ஆயிரம் கோடிக்கு நடந்தது.

டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரூ.1,003 ஆக அதிகரித்தது. டாடா ஸ்டீல் நிறுவன பங்கு ரூ.988 என்ற விலையில், 26.80 லட்சம் பங்குகள் விற்பனையாயின.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவு குறியீட்டு எண் 100.24 புள்ளிகள், சுமால் கேப் 124.70, பி.எஸ்.இ 100 - 119.80 ., பி.எஸ்.இ 200 - 28.99, பி.எஸ்.இ 500 - 92.36 புள்ளிகள் அதிகரித்தன.

அதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எஸ்.ி.ஐ., டாடா மோட்டார், டாடா ஸ்டீல், விப்ரோ, லார்டன் அண்ட் டூப்ரோ, ஏ.ி.எல், பஜாஜ் ஆட்டோ, பர்தி ஏர்டெல், ி.ஹெச்.இ.எல், கிரசம், ஹெச்.ி.எப்.சி வங்கி, ஹூன்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.ி.ி.ி, ஒ.என்,.ி.ி., ரான்பாக்ஸி, சத்யம், ி.ி,எஸ், ஏ.ி,எல்
ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தது.

ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஏ.ி,.ி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.ி.எப்.ி, ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்