தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (19:54 IST)
தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ. 55 குறைந்தது. அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 100 குறைந்தது.

அயல்நாட்டு தங்கம் வெள்ளி சந்தைகளில் 1 அவுன்சிற்கு 8 டாலர் விலை குறைந்ததாக வந்த தகலலையடுத்து, மும்பையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் வர்த்தகர்கள் அதிக அளவு தங்கத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திருமணம், மற்றம் பண்டிகை காலமாக இருந்தாலும், தங்கத்தின் விலை குறைந்ததற்கு காரணம் மொத்த வர்த்தகர்கள் அதிகளவு விற்பனை செய்ததே என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 9, 910 ( 9,965)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ. 9 760 ( 9,815)
பார் வெள்ளி கிலோ ரூ.18,050 ( 18,150)

வெப்துனியாவைப் படிக்கவும்