டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (19:34 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்தது. இன்று காலையில் 1 டாலர் ரூ.39.90/94 என்ற அளவில் விற்பனையானது.

சென்ற வெள்ளிக் கிழமை 1 டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 39.73/74 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ. 39.79 என அறிவித்தது,. இது சென்ற வெள்ளிக் கிழமை அறிவித்த அதே விலையாகும். இன்று ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்