கிலோ ரூ.300 க்கு விற்பனையான மல்லிகை

Webdunia

ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (16:34 IST)
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜைகளையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ஒன்று ரூ.300 க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதியில் நாள்தோறும் சுமார் பத்து டன் மல்லிகை பூ உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதுதவிர கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் கேரளா மற்றும் முப்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிலோ ஒன்று ரூ.75 க்கு விற்பனையான மல்லிகை பூ நாளை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் மைசூரில் தசரா பண்டிகைகளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதலஒரு கிலோ மல்லிகை பூ. ரூ.300 க்கு விற்பனையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்