மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சிறிது நம்பிக்கை பிறந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டு எண் சென்செக்ஸ் 18,031.77 புள்ளிகளாக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரமான 17,998.30 புள்ளிகளை விட 33 புள்ளிகள் அதிகம்.
அதற்கு பிறகு தொடர்ந்து சென்செக்ஸ் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் விலைகள் குறைந்தன. இதனால் தொடர்ந்து சென்செக்ஸ் குறியீடு சரிந்தது. காலை 12 மணியவில் சென்செக்ஸ் 446 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,552.16 ஆக இறங்கியது.
இதே போல் மற்ற பிரிவுகளான மிட் கேப், சுமால் கேப், பி.எஸ்.இ 100, 200, 500 பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன. இவற்றின் குறியீடுகளும் சுமார் 2.5 விழுக்காடுக்கும் அதிகமாக குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது நிப்டி 5360.35 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 புள்ளிகள் அதிகம். பிறகு தொடர்ந்து பங்குகளின் விலைகள் குறைந்ததால் 12.30 மணியளவில் 195 புள்ளிகள் சரிந்தது, 5156.80 புள்ளிகளாக இருந்தது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பி.ஹெச். இ.எல், சிப்லா, டாக்கடர் ரெட்டி, கிரேசம், ஹெச்.டி.எப்..சி வங்கி, ஹெச்.டி.எர்.சி, ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.சி, எல் அண்டி டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சத்யம், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார், விப்ரோ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைகின்றது.
இன்போசியஸ் நிறுவன பங்கு விலை மட்டும் அதிகரித்தது.
எல்லா நிறுவனங்களும் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் இலாப - நஷ்ட அறிக்கையில் நல்ல வருமானத்தையும், இலாபத்தையும் அறிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் பங்குகளின் விலைகள் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.