டாலர் மதிப்பு மாற்றமில்லை!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (14:13 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.36/37 என்ற அளவில் தொடங்கியது. (வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.39.36)

சிறுது நேரத்திற்கு பின் ரூபாய் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ரூ.39. 31 என்ற அளவில் பரிமாற்றம் நடந்தது.

பிறகு ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுத்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கின. இதனால் அதிகளவு டாலர் வரத்து இருந்தது. இதுவே டாலர் மதிப்பு குறைய காரணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்