அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்தது.
பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிகரித்தால், இதன் குறியீட்டு எண் உயர்ந்தது. இது அந்நியச் செலவாணி சந்தையிலும் எதிரொலித்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், 1 டாலர் ரூ 39.31/32 என்று வர்த்தகம் நடந்தது. நேற்றைய இறுதி விலை ரூ. 39.44/45.
பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். அதிகளவு பங்குகளை வாங்கியதால், டாலர் அதிகளவில் அந்நியச் செலவாணி சந்தைக்கு வந்தது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.