மும்பை பங்குச் சந்தையில் காலையில் அந்நிய நாட்டு மூதலீட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளை விற்று இலாபம் அடைய பங்குகளை விற்பனை செய்தனர்.
இதனால் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 204 புள்ளிகள் குறைந்தது. குறியீட்டு எண் 17,287.19 என்ற அளவிற்கு சரிந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 84.15 புள்ளிகள் சரிந்தது. இதன் குறியீட்டு எண் 500.95 புள்ளிகளை தொட்டது.
பிறகு படிப்படியாக உயர்ந்து காலை 11 மணியளவில் மும்பை குறியீட்டு எண் 17,603.76 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 5088.25 புள்ளியாக உயர்ந்தது.
காலையில் எல்லா பிரிவு பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும், பிறகு குறைவதுமாக இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்ப பங்குகளின் விலை அதிகரிக்கும் போக்கு உள்ளது. இன்போசியஸ், டி.சி.எஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளின் விலைகள் அதிகரித்தன.
ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆகியவற்றின் பங்கு விலைகளும் அதிகரித்தன.
என்.டி.பி.சி, ரான்பாக்ஸி லேபாரட்டரிஸ், சிப்லா, அம்புஜா சிமென்ட், ஐ.டி.சி, ஆகியவற்றின் விலை குறைந்தது.
ல்ர்ர்சன் அண்ட் டூர்ரோ பங்குகளின் விலை அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தை போன்றே, தைவான், ஹாங்காங் பங்குச் சந்தைகளில் இறக்கம் காணப்பட்டது. சிங்கப்பூர், ஜப்பான் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் அதிகரித்தது.