நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (12:17 IST)
தமிழகம், கேரளாவில் முட்டை நுகர்வு அதிகரிப்பால் முட்டை விலை 10 காசு உயர்ந்து 150 காசாக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்‌கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் பண்ணையாளர்கள் மார்க்கெட் நிலவரம் பற்றி ஆலோசித்தனர்.

தமிழகத்தில் புரட்டாசி மாத தொடக்கத்தில் முட்டை நுகர்வு குறைந்தது. ரம்ஜான் நோன்பால் கேரளாவுக்கும் முட்டை நுகர்வு குறைந்தது. எனவே கடந்த சில வாரங்களாக முட்டை விலை 140 காசாக இருந்தன.

தற்போது தமிழகம், கேரளாவில் முட்டை நுகர்வு அதிகரிப்பால் முட்டை விலை 10 காசு உயர்ந்து 150 காசாக நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல் கறிக்கோழி விலை கிலோ ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக முட்டை கோழி ரூ.19 ஆக இருந்தது. தற்போது கேரளாவில் நுகர்வு அதிகரிப்பால் ரூ.4 உயர்ந்து ரூ. 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்