வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.49 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.39.49/50).
பிறகு டாலர் வரத்து அதிகரித்ததால் 1 டாலர் ரூ.39.43/44 என்று விலை குறைந்தது.
12 மணியளவில் டாலர் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ரூ.39.47/48 என்ற அளவில் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியின் தலையீடு அந்நியச் செலாவணி சந்தையிலும், நிதிச் சந்தையிலும் இருப்பதால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.