தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தன!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (19:35 IST)
மும்பை பங்குச் சந்தையில், இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 50்., தங்கம் 10 கிராமுக்கு ரூ.50 ம் குறைந்தன!

அயல் நாட்டு சந்தைகளில் இருந்தும், மற்ற நகரங்களில் வந்த தகவலினால் இன்று மொத்த வர்த்தகர்கள் அதிகளவு தங்கம், வெள்ளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் நகை உற்பத்தியாளர்கள் மத்தியில் தங்கம் வாங்குவதிலும், தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதில் போதிய ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் இவற்றின் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலையில் பார் வெள்ளி கிலோ ரூ.18,125 ஆக தொடங்கியது. அதற்கு பின் 18,100 ஆக குறைந்து, மாலையில் ரூ.18,090 ஆக விற்பனையானது. இது நேற்று இறுதி விலையை விட ரூ.50 குறைவு.

இதே போல, காலையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.9,495 ஆகவும் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.9,545 ஆகவும் இருந்தது. வெளிநாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களால், வர்த்தகர்கள் அதிகளவு தங்கத்தை விற்பனை செய்தனர். 10 கிராமுக்கு ரூ.50 குறைந்தது.

இதே போல் வெளிநாடு சந்தையிலும் ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) 730.25/735.00 டாலராக விற்பனையானது. இதன் நேற்றைய விலை 740.25/745.50 டாலர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,490 (9,540)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,440 (9,490)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,090 (18, 140)

வெப்துனியாவைப் படிக்கவும்