ரூபாய் மதிப்பு குறைகிறது!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (12:53 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று காலை 1 டாலர் ரூ.39.86/88 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.

இது வெள்ளிக் கிழமையன்று இருந்த மதிப்பை விட 6 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை மாலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.80/82 என்று இருந்தது.

ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயராமல் இருக்க, அந்நியச் செலவாணி சந்தையில் தலையிட்டு, உபரி டாலரை வங்கிகள் வாங்கும் படி பார்த்துக் கொள்கிறது.

இதனால் இன்று டாலரின் மதிப்பு உயர்ந்து, ரூபாயின் மதிப்பு மேலும் குறையும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

வெள்ளிக் கிழமையன்று பாரத ஸ்டேட் பாங்க் உட்பட, பொதுத்துறை வங்கிகள் டாலரை அதிகளவில் வாங்கின. இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்குகள் விலை குறைந்தது கவனிக்கத் தக்கது.

அடுத்த இரண்டு நாட்களின் 1 டாலர், ூ.40 ஆக உயரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்