டாலர் மதிப்பில் மாற்றம் இல்லை!

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:03 IST)
அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரிசர்வ் வங்கியின் தலையீடு தொடர்ந்து இருந்ததால் 1 டாலர் ரூ. 39.80/82 என்று முடிந்தது.

இன்று ரிசர்வ் வங்கி பணச் சந்தையில் இருந்து, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ 30,400 கோடி திரும்பப் பெற்றது.

அத்துடன் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரி்ன் மதிப்பு சரியாமல் இருக்க, பொதுத்துறை வங்கிகளை, குறிப்பாக பாரத ஸ்டேடே வங்கியை, உபரி டாலர்களை வாங்குமாறு ஊக்குவித்தது.

காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலர் ரூ. 39.75/76 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. ஒரு நிலையில் ரூ. 39.72 என்ற நிலையை எட்டியது. இறுதியில் 1 டாலர் ரூ. 39.82 என்ற நிலையில் முடிவுற்றது.

டாலரின் மதிப்பு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கியின் தலையீடு தொடர்ந்து இருக்கும். அடுத்த ஒரு சில நாட்களில் 1 டாலர் ரூ. 40..20 என்ற் அளவு வரை வரும் என்று கார்ப்பரேஷன் வங்கியின், அந்நியச் செலவாணி பிரிவின் மூத்த அலுவலர் சுதர்சன் பட் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்