மும்பையில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.90ம், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85ம் அதிகரித்தது.
வெளிநாடுகளில் இருந்தும், மற்ற நகரங்களில் இருந்து வந்த தகவலை அடுத்து விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தொழில் துறையினர் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மந்த நிலை மாறி, விற்பனை விறு விறுப்பாக இருந்தது.
தங்கத்தை மொத்த வர்த்தகர்கள் குறைந்த அளவில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதே நேரத்தில் நகை தயாரிப்பாளர்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர். அதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
லண்டன், நியுயார்க், மற்ற ஆசிய நாடுகளிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. இங்கு ஒரு டோரி அவுன்ஸ் (28.3 கிராம்) 740.25 / 745 டாலராக இருந்தது. நேற்று இதன் விலை 733.50 / 739.25 டாலர்.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையி்ல இறுதி விலை விபரம்.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,555 (9,470) தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,510 (9,420)