பங்குச் சந்தை குறீயீட்டு எண் உயர்வு

Webdunia

திங்கள், 24 செப்டம்பர் 2007 (16:24 IST)
பங்குச் சந்தை குறீயீட்டஎணஉயர்வ

இன்று மும்பை பங்குச் சந்தை காலையில் வர்த்தகத்தை தொடங்கியவுடனேயே, பங்குகளின் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் ஐந்து நிமிடத்திலேயே குறீயீட்டு எண் 16,820.53 புள்ளிகளைத் தொட்டது. இது முந்தைய கடைசி (வெள்ளிக்கிழமை) நிலவரத்தை விட 256 புள்ளிகள் உயர்வு.

காலையில் பத்தரை மணியளவில் இலாபம் பார்ப்பவர்கள் பங்குகளை விற்கும் போக்கு காணப்பட்டது. இதனால் பத்தரை மணியளவில் 16,654.34 புள்ளிகளாக சிறிது இறங்கியது. பிறகு பங்குகளின் விலைகள் உயர்ந்து 16,820.53 புள்ளிகளைத் தொட்டது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதன் குறீயிட்டு எண் நிப்டி 4,913.35 புள்ளிகளைத் தொட்டது. இது முந்தைய இறுதி நிலவரத்தை விட 75.80 புள்ளிகள் அதிகம்.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனப் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காணப்பட்டது. இதற்கு காரணம் கோதாவரிப் படுகையில் டி 4 பகுதியில் கச்சா எண்ணைத் துரப்பண கிணற்றிலிருந்து, கச்சா எண்ணை கண்டுபிடிக்கப்படதாக அறிவித்ததே.

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வங்கிகளின் பங்குகள் வாங்குவதிலும் ஆர்வம் காணப்பட்டது.

இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை உயரும் போக்கே காணப்பட்டது.
செப்டம்பர் மாத பங்கு பரிவர்த்தனையை 27 ந் தேதி முடிக்க வேண்டும் என்பதால் பங்கு புரோக்கர்களும், சில்லறை முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கும் போக்கு அதிகளவில் இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்