குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை; மேற்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

வெள்ளி, 31 மே 2013 (19:45 IST)
FILE
மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால் ஜுன் 1 ம்தேதி முதல் 6 ம்தேதி வரை வட தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து மழைராஜ் கூறுகையில், மத்திய வங்க கடல் பகுதியில் கடலூர் மற்றும் நெல்லூரை மையமாக கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நலை உருவாகும் சூழல் உள்ளது. இதனால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் ஜுன் 1 ம்தேதி முதல் 6 ம்தேதி வரை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் கடந்த சில மாதங்களாக நீடித்த கடும் வெப்பம் குறையவும் வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி ஜுன் 2 மற்றும் ஜுன் 15 ஆகிய தேதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்