24 முதல் 26 வரை மழை பெய்ய வாய்ப்பு

தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பன் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், மழை பற்றி ஆய்வு செய்து நமக்கு கணித்து அனுப்பியுள்ளதன் படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. அதனால் தமிழகத்தில் பரவலாக இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்