கடைமடை பகுதிக்கு தண்ணீர்- விவசாயிகள் புகார்

செவ்வாய், 13 ஜனவரி 2009 (14:48 IST)
பி.ஏ.பி. திட்டத்தில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என்று விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து பி.ஏ.பி. மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பொன்னுசாமி பி.ஏ.பி. திட்ட செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்கப் பகுதியான மங்கலம், பூமலூர் சாமளாபுரம் உள்ளிட்ட கடைமடை பகுதிக்கு பி.ஏ.பி. பாசன தண்ணீர் வந்து சேருவதில்லை. கடந்த ஆண்டும் இதே நிலைதான். அப்போதும் புகார் கொடுதோம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மங்கலம் பகுதி வாய்க்கால் கான்கீரிட் போடப்படாமல் மண் தளமாக இருப்பதால் தண்ணீரும் விரயம் ஆகிறது. தண்ணீர் வராத காலங்களில் முட்புதராகி விடுகிறது.மண்மேடுகளும் அதிகரித்து விடுகின்றன.

இதை சீரமைக்காமல் தண்ணீர் திறந்து விடுவதால் பல இடங்களில் உடைப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே பிரதான மற்றும் கிளை வாய்க்கால்களில் புதர் மண்டி இருப்பதை அகற்றி கடை மடை பகுதிக்கும் பி.ஏ.பி.பாசன தண்ணீர் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்