கொப்பரை வரத்து குறைவு

புதன், 7 ஜனவரி 2009 (12:01 IST)
பொள்ளாச்சி: நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை வரத்துக் குறைந்தது.

நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தில் 112 மூட்டை கொப்பரை விற்பனைக்கு வந்தது. நேற்று நடந்த ஏலத்துக்கு 99 மூட்டை கொப்பரை மட்டுமே வந்தது.

சென்ற வாரத்தில் முதல் தரக் கொப்பரை விலை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 36.55 முதல் அதிகபட்சமாக ரூ. 39.10 வரை விற்பனையானது.

நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை விலை கிலோ ரூ. 36.90 முதல் ரூ 39.60 வரை விற்பனையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்