மிளகாய் செடிகள் அழுகல்.

வியாழன், 4 டிசம்பர் 2008 (11:29 IST)
திருவாடானை: சமீபத்தில் பெய்த மழையால் திருவாடானை பகுதியில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் அழுகியுள்ளது.

திருவாடானை தாலுகாவில் ஆர்.எஸ். மங்கலம், ஆதியூர், கீழ்குடி, கட்டிவயல், என்.எம்.மங்கலம், தொண்டி, நம்புதாளை, கடம்பூர், சிறுகம்பூர், திருவெற்றியூர், விசும்பூர், பனிக்கோட்டை, மங்களம், அத்தானூர், ஆவரேந்தல், வடவயல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முன்னால் பெய்த மழையால் மிளகாய் பயிரிடப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து வெளியே செல்ல முடியததால், தண்ணீருக்குள் இருந்த மிளகாய் செடிகள் அழுகிவிட்டன.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்