கரும்பு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

புதன், 3 டிசம்பர் 2008 (12:00 IST)
சிதம்பரம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரும்பு, வாழை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வள்ளலார் கரும்பு விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத் தலைவர் ஏ.எஸ்.வி.வேல்முருகன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், வெள்ளத்தால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்த நிலையில் உள்ளது.

நெற்பயிருக்கு ஏக்கர் ரூ.15 ஆயிரமும், கரும்பு மற்றும் வாழை பயிர்களுக்கு ரூ.20 ஆயிரம் போர்க்கால அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து நில வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் ஏ.எஸ்.வி. வேல்முருகன் கோரியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்