பயிர் சேதம் கணக்கெடுப்பு

திங்கள், 1 டிசம்பர் 2008 (12:02 IST)
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் கணக்கிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் எந்த அளவு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாமக்கல் மாவட்டத்தில் மழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளில் முழு சேதம், பகுதி சேதம் என கண்டறியப்பட்டு வருகிறது.

தற்சமயம் 98 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 14 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று கொல்லிமலையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும் போது தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்