மதுரை:மதுரை மாவட்டத்திலும், பெரியார் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த அணையில் 121 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 136 அடி.
பெரியார் அணைக்கு விநாடிக்கு 1,028 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணையில் 62.73 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதன் அதிக பட்ச நீர் மட்டம் 71 அடி.
வைகை அணையில் விநாடிக்கு 1,653 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்த 41 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மருதா நதியில் 40 மி.மீ, மேட்டுப்பட்டி 38 மி.மீ, கள்ளந்திரி 37 மி.மீ, தனியாமங்கலம் 34 மி.மீ, இடையபாடி 31 மி.மீ, புளியபட்டி, குப்பனாம்பட்டி தலா 30 மி.மீ, மேலூர் 29 மி.மீ, பேரணை 26 மி.மீ, சத்தியார் டாம் 23 மி.மீ, சண்முகாநதி 17 மி.மீ, மஞ்சளார் அணை 12 மி.மீ, சோத்துப்பாறை அணை 9 மி.மீ,, வைகை அணை 8 மி.மீ, உத்தமபாளாயம், வீரபாண்டி, தேக்கடி தலா 5 மி.மீ, பெரியார் அணை, ஆண்டிப்பட்டி 3 தலா 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.