சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த ஏரிக்கு விநாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது ஏரியின் நீர் மட்டத்தை மாவட்ட நிர்வாகமும்ஸ பொதுப் பணித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் மொத்த உயரம் 47 அடி. இதனஅ நீர் மட்டம் 45 அடிக்கு மேல் அதிகரித்தால், ஏரியில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படும்.
அதே நேரத்தில் வீராணம் ஏரியில் இருந்து வெள்ளிங்கள் ஓடை உட்பட மற்ற கால்வாய்களில் பாசனத்திற்காக விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், கடலூர் மாவட்டத்தில் கடற்கரை ஒட்டிய கிராமமான சாமியார் குப்பத்தில் உள்ள மக்கள், சமூதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் அண்ணாமலை நகர் 131 மி.மீ., லால்பேட் 128 மி.மீ, காட்டுமன்னார் கோயில் 128 மி.மீ, சேத்தியாத் தோப்பு 104 மி.மீ, சிதம்பரம் 98 மி.மீ, கொத்தவாச்சேரி 80 மி.மீ, பரங்கிபேட்டை 78 மி.மீ, கடலூர் 67 மி.மீ மழை பதிவாகியுள்ளது.