அக்ரி கிளினிக் அமைக்க கடன்!

திங்கள், 10 நவம்பர் 2008 (09:23 IST)
மேட்டுப்பாளையம்: காரமடை ஊரக பகுதிகளில் அக்ரி கிளினிக் அமைக்க முன்வருபவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம் தாலூகா, காரமடை வட்டாரத்தை சேர்ந்த ஊரக பகுதிகளில் பி.எஸ்.சி வேளாண்மை, தோட்டக்கலை பொறியியல், வேளாண் டிப்ளமோ-படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு அக்ரி கிளினிக் அமைக்க அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது.

அக்ரி கிளினிக் அமைக்க முன்வருபவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடன் பெறுபவர்களுக்கு வேளாண்துறை சார்பில் ரூ.3 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த அக்ரி கிளினிக்கை அமைக்க 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர்களும், டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த கடனுதவி பெற விரும்புவோர், 14 ஆம் தேதிக்குள், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையிலுள்ள, உதவி வேளாண் அலுவலகத்திற்கு நேரில் வருமாறு காரமடை வேளாண் உதவி இயக்குநர் மதனாம்பிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்