மத்திய பிரதேசத்தில் சாகுபடி அளவு பாதிப்பு!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (15:47 IST)
போபால்: மத்திய பிரதேசத்தில் மழை சரியான அளவு பெய்யாததால், உணவு சாகுபடி செய்யும் பரப்பளவு குறையும் என்று தெரிகிறது.

மத்திய பிரதேசத்தில் அதிக அளவு கோதுமை சாகுபடி செய்யும் இந்தூர், உஜ்ஜய்ன், போபால் மண்டலங்களில் சரியான அளவு மழை பெய்யவில்லை. இதனால் இந்த மண்டலங்களில் கோதுமை, பட்டாணி, மைசூர் பருப்பு, பார்லி உட்பட உணவு தானியங்கள் சாகுபடி செய்யும் அளவு குறையும்.

இந்த ரபி பருவத்தில், இது வரை 27 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விதைப்பு நடைபெற்றுள்ளது, இது சாகுபடி செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 31 விழுக்காடு மட்டுமே.

கோதுமை 4.22 லட்சம் ஹெக்டேர், சிறு பருப்பு 10.61 லட்சம் ஹெக்டேர், பட்டாணி 1.47 லட்சம் ஹெக்டேர், மைசுர் பருப்பு 3.10 லட்சம் ஹெக்டேர், பார்லி 17 ஆயிரம் ஹெக்டேர், மற்ற தானியங்கள் 23 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே விதைப்பு நடந்துள்ளது.

கரும்பு 10 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது

மத்திய பிரதேசத்தில் ரபி பருவத்தில் 86.28 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும். சென்ற ஆண்டு 76,82 லட்சம் ஹெக்டேரில் தான் உணவு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன.

இந்த வருடம் மழை போதிய அளவு இல்லாததால், சாகுபடி செய்யும் பரப்பளவு குறையும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்