வேலூர்: திருப்பத்தூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.
திருப்பத்தூர் பகுதியில் சமீபத்தில் மழை, சூறாவளி காற்று அடித்தது. இதனால் வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர், ஊர்கவுண்டன் வட்டம், கொல்ல கவுண்டன் வட்டம், மேட்டுக் கொல்லை, கிழக்கு வட்டம், தலுக்கன் வட்டம் உள்ளிட்ட கிராமங்களில் வாழை மரங்கள் காற்றில் அடியோடு சாய்ந்துள்ளது.
இந்த பகுதியில் சுமார் 300 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
அத்துடன் சாகுபடி செய்த வாழைக்கு வங்கியின் மூலம் ஏற்கெனவே பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய பயிருக்கு கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாசு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.