2008-2009ம் அரவைப்பருவத்தில் 9 விழுக்காடு சர்க்கரை கட்டுமானமுள்ள ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு ரூ.811.80 எனக் குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினையேற்று, தி.மு.க அரசு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையை விட கூடுதலாக ரூ.238.20 உயர்த்தி 9 விழுக்காடு சர்க்கரை கட்டுமானமுள்ள ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,050 என்று நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு 1.10.2008 முதல் தொடங்கி உள்ள நடப்புக் கரும்பு ஆண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் பொருந்துமாறு முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் மேலும் 9 விழுக்காடு சர்க்கரைக் கட்டுமானத்துக்கும் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 விழுக்காடு சர்க்கரைக் கட்டுமானத்துக்கும் டன் ஒன்றுக்கு ரூ.9 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.