கோட்டயம் சந்தையில் இயற்கை ரப்பரின் விலை குறைந்து வருகிறது. நேற்று மட்டும் கிலோவிற்கு ரூ.8.50 குறைந்தது.
இம் மாத தொடக்கத்தில் கேரளா, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை கிலோ ரூ.135 ஆக இருந்தது. பின்னர் இதன் விலை படிப்படியாக குறையத் துவங்கியது.
சென்ற திங்கள்கிழமை கிலோவிற்கு ரூ.6.50 குறைந்தது. இத்துடன் செவ்வாய்க்கிழமையும் கிலோவிற்கு ரூ.8.50 குறைந்தது. இந்த விலை வீழ்ச்சி ரப்பர் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படாததாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.113 ஆகவும், தரம்பிரிக்கப்படாத ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.105 ஆகவும் இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் அதிக அளவு விற்பனைக்கு வந்ததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.