மானியத்தில் வேளாண் கருவிகள்!

புதன், 24 செப்டம்பர் 2008 (17:04 IST)
விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் வேளாண்மை கருவிகள் வழங்கப்படுவதாக பல்லடம் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுந்தரம் தெரிவித்தார்.

பல்லடம் வட்டம் சித்தம்பலம், புள்ளியப்பம்பாளையம் ஆகிய ஊர்களில் வறட்சி நில மேம்பாடு திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் செலவில் விவசாயிகளின் 150 ஹெக்டேர் நிலம் வரப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 மதிப்பில் மக்காசோளம் விதைகள், நுண்ணூட்ட சத்து உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது 50 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் வேளாண்மை கருவிகள், அறுவடை இயந்திரங்கள், விதை விதைப்பு கருவிகள், உரமிடும் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்று அவர் நேற்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்