ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை கிளையில் வாழைத்தார்கள் ஏலம் மூலம் விற்பனை செய்வது துவக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம்-நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி, மஞ்சள், நிலக்கடலை போன்ற விவசாய உற்பத்தி பொருள்கள் ஏலமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நாமகிரிப்பேட்டை விற்பனை சங்கக் கிளையில் வியாழக்கிழமை முதல் வாழைத்தார் ஏலமுறை விற்பனை தொடங்கப்பட்டது. இதை நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் சோ.சீனிவாசன் துவக்கி வைத்தார்.
இதில் அரியாகவுண்டம்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மெட்டாலா, கொங்களம்மன்நகர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூவன், ரோபஸ்டா, தேன்வாழை, ரஸ்தாலி போன்றவகை வாழைத்தார்களை விவசாயிகள் எடுத்து வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், ஏலத்தில் வாங்கினார்கள்.