காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - மழைராஜ்!

தென்மேற்கு வங்கக் கடலில் கடலூருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் பெரம்பலூர் மழைராஜ் தெரிவித்துள்ளார்!

இது குறித்து இன்று மழைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதனால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, கொடைக்கானல், சேலம், தருமபுரி, நாகை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த பழை பெய்ய வாப்ப்புள்ளது.

செப்டம்பர் மாதம் 11 முதல் 22ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்களில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை தேதியின் கணிப்பின்படி 11, 12 மற்றும் 16ஆம் தேதி பெரம்பலூரில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 2008ஆம் ஆண்டில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ஆந்திராவில் காக்கிநாடா, மச்சிலிப்பட்டிணம், கம்பம் ஆகிய பகுதிகளில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த ஜூன் மாதம் கணித்து கூறியிருந்ததுபடி, கேரள மாநிலம் கண்ணூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் கூடுதல் மழை பெய்துள்ளது.

செப்டம்பர் 8ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் பெய்த மழையின் அளவில் கண்ணூர் பகுதி மாநிலத்திலேயே அதிக அளவாக 1781 மி.மீ. மழையும், கோழிகோட்டில் இரண்டாவதாக 1631 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

நிலநடுக்க கணிப்பின்படி செப்டம்பர் 13, 21ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்