கனமழை- மே‌ட்டூ‌ர் அணை நீர் மட்டம் அதிகரிப்பு!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:13 IST)
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இதே அளவு அணைக்கு நீர் தொடர்ந்து வந்தால், அடுத்த வாரத்தில் நீர் மட்டம் 100 அடியை தொட்டுவிடும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 88.9 அடியாக அதிகரித்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 46,348 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இது நேற்றைய நீர்வரத்தை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 13,004 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,717 கன அடி, வென்னாற்றில் 7,024 கனஅடி, கல்லணை கால்வாயில் 1,209 கனஅடி நீரும் பிரித்து அனுப்பப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்