தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
மழை பற்றி ஆய்வு செய்து வரும் மழை ராஜ், கடந்த முறை அனுப்பிய ஆய்வு முடிவில், ஆகஸ்ட் 16 முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி ஆகஸ்ட் 24 முதல் 27ம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பெய்தது.
தற்போது அனுப்பியுள்ள ஆய்வு முடிவில், தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை, நவம்பர் மாதம் 5ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
இதனால் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 3, 4 தேதிகள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ள தேதியாகும்.
நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி செப்டம்பர் மாதம் 2ம் தேதி நிலநடுக்கம் ஏற்படும் தேதியாகும்.