பயத்தம் பயறு விற்பனை - எம்.எம்.டி.சி.!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 2 ஆயிரம் டன் பயத்தம் பயறு விற்பனை செய்வதாக எம்.எம்.டி.சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமான மினரல் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் மியான்மரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 2,000 டன் பச்சை பயிறு, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறது. இதற்கான விலைப்புள்ளிகளை கோரியுள்ளது. இந்த விலைப்புள்ளிகள் சமர்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 27. இவை ஆகஸ்ட் 29ஆம் தேதி திறக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

மியான்மரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயத்தம் பயறு, மும்பை துறைமுகத்திற்க ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வந்து சேரும். இவற்றை மொத்தமாக வாங்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அத்துடன் கூடுதலாக தேவைப்பட்டாலும் தெரிவிக்கலாம் என்று எம்.எம்.டி.சி. அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்