பருவ மழை குறையும் வாய்ப்புள்ளது

2008ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தென் தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை பற்றி ஆய்வு நடத்தி வரும் மழை ராஜ் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், தமிழ்.வெப்துனியா.காமிற்கு அனுப்பியுள்ள ஆய்வில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழையின் அளவு குறையும் வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளில் பெய்த கன மழை அளவிற்கு இல்லாமல், இந்த ஆண்டு வானிலை மாற்றத்தால் குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடலூருக்கு தெற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தற்போது பரவலாக பெய்து வரும் மழை தீவிரமடைந்து ஜூலை 22ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்