தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.4.21 கோடி ஒதுக்கீடு!
புதன், 11 ஜூன் 2008 (12:56 IST)
தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், திருச்சியில் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்திற்கு 2008-09ம் ஆண்டுக்காக மத்திய அரசு ரூ.4.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சவுந்தையா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் மா, வாழை, கொய்யா ஆகிய மரங்கள் வளர்க்கப்படும். மேலும் மிளகாய், பூஞ்செடிகள், மூலிகை மரங்கள் பயிரிடப்படும்.
நீர் ஆதாரங்களை பெருக்குவதற்காக குளம், குட்டைகள் வெட்டப்படும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக விவசாயிகள் தங்கள் பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சவுந்தையா கூறியுள்ளார்.