''தமிழ்நாட்டில் உரத்தட்டுப்பாடு கிடையாது'' என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது 4,500 டன் டிஏபி உரம் அரசின் கையிருப்பில் உள்ளது.
ஸ்பிக் நிறுவனம் உரத் தயாரிப்பை நிறுத்திவிட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு டான்ஃபெட் நிறுவனத்தின் மூலமாக அயல்நாட்டிலிருந்து உரத்தை இறக்குமதி செய்ய முதலமைச்சர் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
தற்போது உரப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு உரம் உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து உரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.