நாளை முதல் மழை பெய்யலாம்!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (13:06 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடலில் பாம்பன் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் இருப்பதாக மழை பற்றி ஆய்வு செய்து வரும் மழை ராஜ் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் கணித்து எமது தமிழ்.வெப்துனியா.காம்-ற்கு அனுப்பியுள்ள ஆய்வில், பாம்பன் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த தாழ்வு மண்டலத்தால் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மழை தேதியின் கணிப்பின்படி மே மாதம் 9ஆம் தேதி முதல் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நில நடுக்க தேதியின்படி மே 5, 16, 26 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் அல்லது இடம் மாறுபடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்