விலையைக் கட்டுப்படுத்த உளுந்து, துவரம் பருப்பு இறக்கும‌‌தி!

வியாழன், 13 மார்ச் 2008 (17:39 IST)
உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதற்கான விலைப்புள்ளியை நபீட் என்று அழைக்கப்படும் தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பணை இணையம் கோரியுள்ளது.

இந்த விலைப்புள்ளியில் எவ்வளவு உளுந்து, துவரம் பருப்பு தேவை என்று குறிப்பிடப்படவில்லை. இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஏப்ரல், மே மாதங்களில் வழங்க வேண்டும்.

இந்த விலைப்புள்ளியில் 5,000 டன்னுக்கு விலை கேட்கப்பட்டுள்ளது. உளுந்து, துவரம் பருப்பை விற்பனை செய்பவர்கள் 5 ஆயிரம் டன் மடங்கில் விற்பனை செய்யவேண்டும்.

இவை இந்த பருவ காலத்தின் விளைச்சலாக இருக்க வேண்டும். சென்ற ஆண்டு விளைந்து,. இருப்பில் உள்ளவற்றை வழங்க கூடாது. இவற்றை ஏப்ரல் முதல் மே 15 ந் தேதிக்குள் மும்பை, கன்டலா, சென்னை துறைமுகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் நபீட், எஸ்.ி.ி, எம்.எம்.ி.சி ஆகியவை உணவு தானியங்களை இறக்குமதி செய்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்