தமிழக நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.2,182 கோடி: உலக வங்கி நிதியுதவி!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:23 IST)
த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்ள 5,763 ‌நீ‌ர் ‌நிலைகளை‌‌பபுனரமை‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காூ.2,182 கோடி கடனுத‌வி பெறு‌மஒ‌ப்ப‌ந்த‌மஒ‌ன்றஉலவ‌ங்‌கியுட‌னகையெழு‌த்தா‌கி உ‌ள்ளது.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌மமாநிலத்தில் 4 லட்சம் ஹெக்டேர் நிலம் பயனடையும் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

நீர் நிலைகளை பழுதுபார்த்து சீர்படுத்தி அவற்றை பழைய நிலைக்கே கொண்டு வரும் இ‌ததிட்டம் உலக வங்கி கடனுதவியுடன் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மே‌ற்கவ‌ங்க‌‌ம், ஒ‌ரிசஆகிய மாநிலங்களி‌உ‌ள்நீர்நிலைகளு‌மமேம்படுத்தப்படும்.

விவசாயத் துறையோடு நேரடியாக தொடர்புடைய நீர் நிலை மேம்பாட்டுத் திட்டம் ரூ.3,00 கோடி செலவில் 2005-ம் ஆண்டு ஜனவரியில் அனுமதிக்கப்பட்டது. இத‌ன் ‌கீ‌ழதமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் 26 ப‌ணிகளு‌க்கஅனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காமத்திய அரசின் பங்காக இதுவரை ரூ.179.73 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களின் மூலம் 1,098 நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு 1.72 லட்சம் ஹெக்டேர் நிலம் பயனடையும். நீர் நிலைகள் செம்மைப்படுத்தப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்ட பின்னர் 78 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதுவரை 11 மாநிலங்களில் 736 நீர் நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்