இந்தியா வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 22 ஆயிரம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய உள்ளது.
இதற்கான விலைப்புள்ளி கோரிக்கை (டெண்டர்) மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினரல் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 12 ஆயிரம் டன் மைசூர் பருப்பு, 6 ஆயிரம் டன் உளுந்து, 4 ஆயிரம் டன் கடலை பருப்பு இறக்குமதி செய்ய உள்ளது.
இந்த விலைப் புள்ளிகளை வழங்க கடைசி நாள் பிப்ரவரி 26. இவற்றை மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒப்படைக்க வேண்டும்.
இந்தியாவின் உபயோக்த்திற்கு வருடத்திற்கு குறைந்த பட்சம் 160 லட்சம் டன் பருப்பு, தானிய வகைகள் தேவை. ஆனால் உள்நாட்டில் 120 முதல் 140 லட்சம் டன் வரை மட்டுமே உற்பத்தியாகிறது. மீதம் உள்ள பற்றாக்குறையை இறக்குமதி செய்து ஈடுகட்டப்படுகின்றன.