நெல் ‌விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 உயர்த்த கோரி பா.ஜ. 13ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (09:59 IST)
நெல் விலையை குவிண்டாலுக்கு 1,000 ரூபாயாக குவிண்டாலுக்குபா.ஜ.க. சார்பில் 13ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திய அரசு கோதுமைக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்திய அளவு நெல்லுக்கு உயர்த்தவில்லை. நெல்லுக்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரி ஆந்திராவில் இதுகுறித்து காட்டிய ஆர்வமும், எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி காட்டும் ஆர்வமும் தமிழக அரசு காட்டவில்லை.

எனவே, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆதார விலை 1,000 ரூபாய் வழங்கவேண்டும் என்கின்ற கோரிக்கையை பிரதானமாக வலியுறுத்தி தமிழகத்தில் 9 இடங்களில் இம்மாதம் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டம் மதுராந்தகத்தில் 13-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்