மேட்டூர் அணைக்கு தொடர்ந்து ‌நீ‌ர் வர‌த்து அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (10:43 IST)
மே‌ட்டூ‌ர் அணை‌க்கு தொட‌ர்‌ந்து ‌நீ‌ர் வர‌த்து அ‌திக‌‌ரி‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 20,004 கன அடி தண்ணீர் வந்து கொண்டிரு‌க்‌கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 31,103 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

காவேரியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிந்தன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை‌யி‌ன் முழு கொ‌ள்ளளவான 120 அடியை நேற்று மு‌ன்‌‌தின‌ம் தாண்டியது. 7 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது இ‌ந்த ஆ‌ண்டு ‌நிர‌ம்‌பியு‌ள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் இரண்டு நாட்களாக வெளியேற்றப்படுகிறது. இன்று காலையில் அணையில் இருந்து விநாடிக்கு 31,103 கனஅடி தண்ணீ்ர வெளியேற்றப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், வெள்ள தடுப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்