நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 1000 நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத்திய அரசு கோதுமை கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 1000 என நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் நெல் பயிரிடமும் அதிக செலவாகிறது.
ஆனால் நெல்லுக்கு அரசு நிர்ணயிக்கும் விலை குறைவாக உள்ளது. எனவே நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1000 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.